பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் தோல்வி தழுவி வெளியேறினர்.
26-வது தரவரிசையில் உள்ள இத்தாலி வீராங்கனை பென்னெட்டாவிடம் வீனஸ் வில்லியம்ஸ் 5-7, 3- 6 என்று தோல்வி தழுவினார்.
அதேபோல் 27-வது தரவரிசையில் உள்ள ஸ்லோவேகிய வீராங்கனை காதரீனா ஸ்ரெபோட்னிக்கிடம் 5-வது தரவரிசையில் உள்ள செரீனா வில்லியம்ஸ் 4- 6, 4- 6 என்ற செட்களில் தோல்வி தழுவினர்.
மற்றொரு 3வது சுற்று ஆட்டத்தில் 2-வது தரவரிசையில் உள்ள செர்பிய வீராங்கனை ஆனா இவானோவிச் டென்மார்க்கின் 30-வது தரவரிசை வீராங்கனை வூஸ்னியாகியை 6- 4, 6- 1 என்று வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
போலாந்தின் வளரும் நட்சத்திரம் ராத்வான்ஸ்கா பிரான்சின் 19ம் தரவரிசை வீராங்கனை அலைஸ் கார்னெட் என்பவரை 6- 4, 6- 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
10-வது தரவைசையில் உள்ள சுவிஸ். வீராங்கனை ஸ்னைடர் பிரான்சின் எமில் லோய்ட் என்பவரை 7- 6, 5- 7, 6- 2 என்ற செட்களில் வீழ்த்த கடுமையாக போராடினார். ஆனால் இறுதியில் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ஸ்பெயினைச் சேர்ந்த அதிகம் அறியப்படாத கார்லா சுவாரேஸ் நவார்ரோ என்ற வீராங்கனை ஆஸ்ட்ரேலியாவின் டெல்லாக்வா என்ற வீராங்கனையை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
அதேபோல் செக்கோஸ்லாவாகியாவின் அதிகம் அறியப்படாத பெட்ரா செட்கோவ்ஸா என்ற வீராங்கனை சக வீராங்கனை பெனெசோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற 2வது சுற்று ஆட்டங்களில் ரஷ்ய வீராங்கனைகள் மரியா ஷரபோவா, நாடியா பெட்ரோவா ஆகியோர் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.