இந்தியாவின் மகேஷ் பூபதி, பகாமஸின் மார்க் நோல்ஸ் இரட்டையர் இணை ஹாம்பர்க் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் 2வது சுற்றில் தோல்வி தழுவி வெளியேறினர்.
தரவரிசை வழங்கப்படாத அமெரிக்க இரட்டையர் இணையான ஜேம்ஸ் பிளேக்-மார்டி ஃபிஷ் இணை 4ஆவது தரவரிசையில் உள்ள பூபதி- நோல்ஸ் இணையை 6- 2, 6- 3 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி வெற்றிபெற்றனர்.
பூபதி- நோல்ஸ் இணைக்கு முதல் சுற்றில் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லியாண்டர் பயஸும் அவரது புதிய இரட்டையர் இணையான டாமி ராப்ரீடோ ஆகியோர் செக்.-ரஷ்ய இணையான எர்லிச்- ஆன்டி ராம் இணையை காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் எதிர்கொள்கின்றனர்.