தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டிகளின் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஆகியோருக்கு முதல் சுற்றில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளின் தரநிலையில் நான்காம் இடத்தைப் பெற்றுள்ள இந்தியாவின் பூபதி - பகாமஸின் மார்க் நெளலஸ் இணை தங்களது இரண்டாம் சுற்றில், ஸ்பெயின் ஃபெலிசியானோ லோபஸ் - ஃபெர்ணாண்டோ வெர்டாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் இகோர் ஆண்ட்ரீவ் - குரோஷியாவின் இவான் ஜுபிசிஸ் இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் இணையுடன் மோதுவர்.
இந்தியாவின் பயஸ் - ஆஸ்ட்ரேலியாவின் பால் ஹான்லி இணை (தரநிலையில் 8-வது இடம்), பெருவின் லூயிஸ் ஹார்னோ - அர்ஜென்டினாவின் ஜான் மனோகா மற்றும் பொலிஷின் மனிசுஸ் ஃப்யூர்ஸ்டன்பெர்க் - மார்கோன் மாட்கோவ்ஸ்கி இடையே நடக்கும் போட்டியில் வெற்றிபெறும் இணையுடன் மோதுவுள்ளனர்.