Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாலென்சியா ஓபன்: அல்மார்கோ அரையிறுதியில்!

வாலென்சியா ஓபன்: அல்மார்கோ அரையிறுதியில்!
, சனி, 19 ஏப்ரல் 2008 (15:57 IST)
வாலென்சியா: வாலென்சியா ஓபன் ஆடவர் டென்னிஸ் தொடர் காலிறுதியில் 2 முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் அல்மார்கோ வெற்றி பெற்று அரையிறுதிக்குச் சென்றுள்ளார்.

களிமண் தரையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2ம் தரவரிசையில் உள்ள சக வீரர் ஜுவான் மொனாகோவை 6- 3, 6- 2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் அல்மார்கோ

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 8ம் தரவரிசையில் பொடீடோ ஸ்டாரேஸ் 3- 6, 0- 3 என்று டாமி ராப்ரீடோவிற்கு எதிராக பின் தங்கியிருந்த போது வலது இடுப்பில் காயம் ஏற்பட்டதால் பாதியிலேயே விலகினார். இதனால் ராப்ரீடோ அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு காலிறுதியில் ஃபெரர் 6- 3, 1- 6, 7- 5 என்ற செட் கணக்கில் ஃபெர்னான்டோ வெர்டாஸ்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil