Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செரீனா-ஷரபோவா காலிறுதியில் மோதல்!

செரீனா-ஷரபோவா காலிறுதியில் மோதல்!
, வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (10:17 IST)
ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டித் தொடர் காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சும், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவும் மோதுகின்றனர்.

ஸ்லோவேனியா வீராங்கனை ஸ்ரெபோட்னிக்கை 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

ஷரபோவா ஏற்கனவே ததியானா பெரெபிய்னிஸ் என்பவரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச் ரஷ்ய வீராங்கனை ரோடியோனோவாவை 6-0, 6-2 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

பிரான்ஸ் வீராங்கனை மரியோன் பர்டோலியை 6-4, 4-6, 6-1 என்று வீழ்த்திய ஸ்வொனரேவாவை ஜான்கோவிச் காலிறுதிச் சுற்றில் சந்திக்கவுள்ளார்.

எலினா டீமென்டீவா 6-4, 7-5 என்று விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தி பேட்டி ஸ்னைடருடன் காலிறுதியில் மோதுகிறார். ஸ்னைடர் நேர் செட்களில் ராட்வன்ஸ்காவை வீழ்த்தினார்.

மற்றொரு காலிறுதியில் ஆக்னெஸ் ஸாவேய் மற்றும் அலைஸ் கார்னெட் ஆகியோர் மோதுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil