சீனாவின் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் தொடரில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில், சீன வீராங்கனை வென்சுன் குவோ தங்கப் பதக்கம் வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்துள்ளார்.
இன்று நடந்த இறுதிப் போட்டியில் 102.3 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் தங்கப் பதக்கம் வென்ற வென்சுன் (வயது 24), மொத்த புள்ளிகளின் அடிப்படையில் (492.3 புள்ளி) புதிய ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டியில் ரஷ்யாவின் நடாலியா படிரினா 489.1 புள்ளியுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஜார்ஜியாவைச் சேர்ந்த நினோ 487.4 புள்ளியுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.