யுவ்ராஜ் மீது நம்பிக்கை உள்ளது! அவர் அபாயகரமான பேட்ஸ்மென் - கூறுகிறார் தோனி!
, செவ்வாய், 25 மார்ச் 2014 (11:16 IST)
நடப்பு 20 ஓவர் உலகக் கோப்பை முதல் 2 போட்டிகளில் ஹபீஸுக்கு கேட்சை விட்டு பிறகு பேட்டிங்கில் சோபிக்காமல் பவுல்டு ஆனது, 2வது போட்டியில் அதிரடி மன்னன் கெய்லுக்கு கேட்சைக் கோட்டைவிட்டு பிறகு பேட்டிங்கில் தடுமாறிய யுவ்ராஜ் சிங் ஃபார்முக்கு வந்து விடுவார் என்று தோனி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
"
யுவ்ராஜ் சிங் சிறந்த T20 பேட்ஸ்மென், அவர் ரிதமில் இல்லை என்று நான் கூறுகிறேன், ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டு பிறை இருபது ஓவர் அணிக்கு திரும்பி வந்து விளையாடுவது கடினமான விஷயம். அணிக்குத் திரும்பும் எந்த ஒரு வீரருக்கும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும், ஓரிரு போட்டிகளில் அவர் செட்டில் ஆகிவிடுவார் என்று நம்புகிறோம்.
அவருக்கு ஒரு நல்ல போட்டி விரைவில் அமையும் என்று நம்புகிறோம். அவர் எப்படிப்பட்ட மேட்ச் வின்னர் என்பது நமக்குத் தெரியும், சொந்த முயற்சியில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் யுவ்ராஜ்.