ஜடேஜா அபாரப் பந்து வீச்சு! மே.இ.தீவுகள் 233/9 (50)
, செவ்வாய், 11 ஜூன் 2013 (18:54 IST)
ஓவலில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் தோனியினால் முதலில் பேட் செய்ய பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் ஜடேஜாவின் 5 விக்கெட்டுகள் ஸ்பெல்லினால் 50 ஒவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.45
ஓவர் வரை 182 ரன்கள் எடுத்து திணறி வந்தது மேற்கிந்தியட் தீவுகள் ஆனல் டேரன் சாமியின் அதிரடி ஆட்ட அரை சதத்தினால் கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் விளாசப்பட்டது.இஷாந்த் சர்மா முதல் 7 ஓவர்களில் 17 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். ஆனால் கடைசி 3 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்தார். அதுவும் 49வது ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் உதவியுடன் 21 ரன்களை விளாசினார் டேரன் சாமி. கடைசி ஓவரில் ரவீந்தர் ஜடேஜாவை 2 பவுண்டரி ஒரு சிக்சர் என்று 14 ரன்கள் விளாசினார் சாமி. கடைசியில் அவர் 35 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 நாட் அவுட்டாக இருந்தார்.ஜடேஜா, 10 ஓவர்களில் 2 மைடன்கள் 36 ரன்கள் 5 விக்கெட்டுகள். முன்னதாக கிறிஸ் கெய்ல் அதிரடியைத் துவங்கிய தருணத்தில் புவனேஷ் அபாரமாக வாசிம் அக்ரம் கூறியது போல் வெளியே ஒரு பந்தை வீச எட்ஜ் எடுத்தது.அதன் பிறகு சார்லஸ் அபாரமாக சில காட்டுக் காட்டினார். அவரும் டேரன் பிராவோவும் இணைந்து 14 ஓவர்களில் 78 ரன்களை சேர்த்து ஸ்கோரை 103 ரன்களுக்கு உயர்த்தினர்.அப்போதுதான் ஜடேஜா வந்தார் சார்லஸை வீழ்த்தினார். அடுத்து சாமியெல்ஸ், சர்வாண் ஆகியோரையும் தலா 1 ரன்னுக்கு வெளியேற்ற 109/4 என்று ஆனது.டிவைன் பிராவோ 40 பந்துகளில் 25 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் வீசிய அருமையான பவுன்சருக்கு புல் ஷாட் ஆடி எல்லைக்கோட்டு கயிற்றருகே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.நடுவில் ஜடேஜாவை கொண்டுவராமல் கோலியை அனாவசியமாக பயன்படுத்தினார் தோனி. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. போலார்ட் களமிறங்கி 14 பந்துகள் ரன் இல்லை பிறக் அஷ்வினை தொடர்ச்சியாக 2 சிக்சர்களை விளாசினார். ஆனால் அவர் 22 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்திடம் வீழ்ந்தார்.சுனில் நரைன், ரவி ராம்பால் இருவரையும் ஜடேஜா வீழ்த்தினார். ஆனால் கடைசி விக்கெட்டுக்காக கிமார் ரோச் 8 பந்துகள் விளையாடி 0-வில் தேங்க சாமியின் மட்டும் 51 ரன்களை விளாசித் தள்ளினார்.ஜடேஜா, சாமி முதல் செஷனில் சிறப்பாக செயல்பட்டனர். இந்தியா இலக்கை துரத்த இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கும்.