81வது சதம்! 25,000 ரன்கள் சச்சின் புதிய சாதனை
, வெள்ளி, 8 பிப்ரவரி 2013 (14:40 IST)
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியுடன் நடைபெற்று வரும் இரானி கோப்பைக்கான 5 நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் சற்று முன் சதம் எடுத்தார். அவரது 81வது சதமாகும் இது! சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார் சச்சின்.முதல் தர கிரிக்கெட்டில் 303வது போட்டியில் ஆடும் சச்சின் 25,001 எடுத்து மற்றொரு சாதனை புரிந்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார்.139
பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் எடுத்த சச்சின் தற்போது 106 ரன்களை எடுத்து விளையாடி வருகிறார். அவருடன் சவான் 40 ரன்களில் விளையாடி வருகிறார்.526
ரன்களைத் துரத்தி வரும் மும்பை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.ரோஹித் சர்மாவை 0-வில் ஹர்பஜன் சிங் வீழ்த்தினார், ஏற்கனவே ரகானேயை வீழ்த்தி இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் கேப்டன் ஹர்பஜன் சிங்.பாண்டே 2, ஹர்பஜன் 2, ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர். அபிமன்யு மிதுன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.