பனேசர் சுழலில் சிக்கி தவிக்கும் இந்தியா - 117/7
, ஞாயிறு, 25 நவம்பர் 2012 (16:47 IST)
மும்பையில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் பனேசர் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன் எடுத்து திணறி வருகிறது. கம்பீர் 53 ரன்னில் களத்தில் உள்ளார்.86
ரன்கள் பின்னடைவுடன் களம் இறங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. சேவாக் (9), புஜாரா (6), சச்சின் (8), கோலி (7), யுவராஜ் சிங் (8), தோனி (6) ஆகியோர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.சேவாக், சச்சின், யுவராஜ் சிங், தோனி ஆகிய முக்கிய விக்கெட்டுகளை பனேசர் வீழ்த்தினார். புஜாரா, கோலி விக்கெட்டுகளை ஸ்வான் கைப்பற்றினார். முதல் இன்னிங்சில் இந்த பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சேவாக், சச்சின், கோலி, தோனி, அஸ்வின் ஆகியோர் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நன்றாக விளையாடிய அஸ்வின் (11), பனேசர் பந்தை தூக்கி அடிக்க முயன்றபோது பட்டேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங் களம் இறங்கினார். கம்பீர் அபாரமாக விளையாடி அரை சதம் அடித்தார்.கடைசி நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன் எடுத்துள்ளது. கம்பீர் 51 ரன்னிலும், ஹர்பஜன் ஒரு ரன்னிலும் களத்தில் உள்ளனர். தற்போது இந்திய அணி 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது.நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. கம்பீர்-ஹர்பஜன் ஜோடி இந்தியாவின் தோல்வியை தவிர்க்குமா? அல்லது கோட்டை விடுமா? என்பது நாளை தெரிந்து விடும்.