பிரிஸ்பனில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸீலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலியா அணி வீழ்த்தியது. ஆஸ்ட்ரேலியா அணி வீரர் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பூவா தலையா வென்ற நியூஸீலாந்து அணி முதல் இன்னிங்சில் 295 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக வெட்டோரி 96 ரன்னும், பிரோன்லீ 77 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்ட்ரேலியா அணி 427 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அணித் தலைவர் கிளார்க் 139 ரன்கள் எடுத்தார். ஹெட்டின் 80 ரன்னும், பாண்டிங் 78 ரன்னும் எடுத்தனர்.
132 ரன்கள் பின் தங்கி இருந்த நியூஸீலாந்து அணி 4வது நாள் ஆட்டத்தை இன்று காலை தொடங்கிய சிறிது நேரத்தில் 150 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
அதிகபட்சமாக பிரோவ்லீ 42 ரன்னும், ரைடர் 36 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
ஆஸ்ட்ரேலியா தரப்பில் பட்டின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். லயான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
18 ரன்கள் வெற்றி இலக்காக ஆட்ரேலியா அணிக்கு நியூஸீலாந்து நிர்ணயித்துள்ளது. இதைத் தொடர்ந்து வார்னர், ஹியூஸ் களம் இறங்கினர். அதிரடியாக விளையாடிண ஹியூஸ் 7 ரன்னில் மார்டீன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து உஸ்மான் கவாஜா களம் இறங்கினார். 4 பந்துகளை சந்தித்த அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. பிரேஸ்வெல் பந்தில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை அடித்து ஆஸ்ட்ரேலியா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார் வார்னர்.
6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேம்ஸ் பட்டின்சன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.