சார்ஜாவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அப்ரிடியின் அபார பந்துவீச்சு, பேட்டிங்கால் பாகிஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
பூவா தலையா வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தாலும் அப்ரிடி அபாரமாக விளையாடி 65 பந்தில் 75 ரன்கள் எடுத்தார். இதில் 3 சிக்சர், 4 பவுண்டரி அடங்கும்.
49.3 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. அப்ரிடியை தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை.
201 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 45.2 ஓவரில் 174 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் 2 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக சங்கக்கரா 58 ரன்னும், ஜெயவர்த்தனே 55 ரன்னும் எடுத்தனர். அணித் தலைவர் தில்சான் 11 ரன் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
பேட்டிங்கில் அசத்திய அப்ரிடி பந்தி வீச்சிலும் கலக்கினார். 9.2 ஓவர்கள் வீசிய அப்ரிடி 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றினார்.