Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டேரன் பிராவோ சதம்; வலுவான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

டேரன் பிராவோ சதம்; வலுவான நிலையில் வெஸ்ட் இண்டீஸ்
, திங்கள், 31 அக்டோபர் 2011 (16:49 IST)
டாக்காவில் நடைபெறும் வங்கதேச, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் தன் 2வது இன்னிங்ஸில் டேரன் பிராவோவின் அபார சதத்துடன் 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் 331 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பார்ப்பதற்கு பிரைன் லாராவை உரித்து வைத்தாற்போல் ஆடும் டேரன் பிராவோ 165 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதம் 100 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இவருடன் இரவுக்காவலன் கேமர் ரோச் 4 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

தனது 10வது டெஸ்ட் போட்டியில் முதல் டெஸ்ட் சதத்தை எடுத்துள்ளார் டேரன் பிராவோ. பிராவோவும் கிர்க் எட்வர்ட்சும் இணைந்து 151 ரன்களை 3வது விக்கெட்டுக்காகச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் தரப்புக்குத் திரும்பியுள்ளது.

துவக்கத்தில் பேட்டைச் சுற்றி பீல்டர்களை நிற்த்தினார் வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் ஆனால் டேரன் பிராவோ தாக்குதல் முறையில் ஆடி ஷாகிப் அல் ஹசனை இரண்டு பவுண்டரிகளும், நாசர் ஹுசைனின் ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் ஒரு மிகப்பெரிய சிக்சரையும் அடித்து ஃபீல்டர்களை பின்வாங்கச் செய்தார்.

ஆனால் வங்கதேச பீல்டிங்கிலும் தவறுகள் நிகழ்ந்தன. பிராவோ ஒரு முறை ஷாகிப் பந்தில் கேட்ச் கொடுக்க தனை முஷ்பிகுர் கோட்டை விட்டார். பிறகு ஷாகிப் பந்திலேயே இம்ருல் கயேஸ் மேலும் ஒரு கேட்சை விட்டார்.

கர்க் எட்வர்ட்ஸ் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்திருந்தபோது ஷுரவாடி ஷுவோ பந்தில் பவுல்டு ஆனார்.

இன்னும் 2 நாட்கள் உள்ள இந்தப் போட்டியில் வங்கதேசம் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராட நேரிடும் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil