Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட் செய்தி: இந்தியா அபாரம்; தொடரை வென்றது

கிரிக்கெட் செய்தி: இந்தியா அபாரம்; தொடரை வென்றது
, வெள்ளி, 21 அக்டோபர் 2011 (08:29 IST)
FILE
மொஹாலியில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி ஒருநாள் தொடரை 3- 0 என்று கைப்பற்றியது.

ஒரு நேரத்தில் தேவைப்படும் ரன் விகிதம் ஓரு ஓவருக்கு 10 ரன்களை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அதனை அபாரமாக மீண்டும் ஒருமுறை தோனி இருந்து முடித்துக் கொடுத்தார்.

ரவீந்திர ஜடேஜாவின் துணையுடன் ஆடிய தோனி, பிரஸ்னென் வீசிய கடைசி ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி வெற்றிக்கான ரன்களை எடுத்தார்.

தோனி கடைசியில் 31 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இங்கிலாந்து ஃபீல்டிங் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 298 ரன்களை அந்த அணியால் தோல்வியிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.

கவுதம் கம்பீரும், ரஹானேயும் இணைந்து 111 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். ரஹானே 104 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் 34 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது. விக்கெட் கீப்பர் கீஸ்வெட்டருக்கு மறக்கவேண்டிய போட்டியாகிவிட்டது. கம்பீர் 17 ரன்களில் இருந்தபோது அவுட் ஆக்கும் வாய்ப்பை கோட்டை விட்ட கீஸ்வெட்டர் பிறகு வீரத் கோலிக்கு டேர்ன்பாக் பவுன்சரில் ஒரு கேட்சைக் கோட்டை விட்டார்.

ஸ்டீவ் ஃபின் அபார வேகத்தில் வீசி 9 ஓவர்களில் 31 ரன்களை விட்டுக் கொடுத்தாலும் கடைசி ஓவரில் அவரை 13 ரன்கள் விளாசினர் இந்திய பேட்ஸ்மென்கள்.

கம்பீரை பீட்டர்சன் அபாரமாக கேட்ச் பிடித்து வெளியேற்ற, ரஹானேயை அலிஸ்டைர் குக் கேட்ச் பிடித்தார். ரஹானே ஷாட் லீடிங் எட்ஜ் ஆனது. ரெய்னாவும் பிரெஸ்னனிடம் வீழ்ந்தார். ரன் எதுவும் எடுக்கவில்லை. இந்தியா 39வது ஓவரில் 217/4 என்று ஆனபோது இங்கிலாந்துக்கு வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது.

பிறகு ஸ்கோர் 235 ஆக ஆனபோது 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த கோலி ஸ்வான் பந்தில் எல்.பி. ஆனார். இப்போது உண்மையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு சற்று மங்கலாகவே இருந்தது.

அதன் பிறகு ஜடேஜாவும், தோனியும் சில அபாரமான ஷாட்களை அடித்து வெற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்ட நாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து பந்து வீச்சில் ஸ்டீவ் பின் தவிர மற்றவர்கள் அடி வாங்கினர்.

Share this Story:

Follow Webdunia tamil