Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட் கிரிக்கெட் செய்தி: மைக் ஹஸ்ஸி அபாரம் 273 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்ட்ரேலியா

Advertiesment
டெஸ்ட் கிரிக்கெட் செய்தி: மைக் ஹஸ்ஸி அபாரம் 273 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்ட்ரேலியா
, புதன், 31 ஆகஸ்ட் 2011 (18:19 IST)
கால்லே மைதானத்தில் இன்று துவங்கிய ஆஸ்ட்ரேலியா, இலங்கை அணிகளுகு இடையிலான முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இலங்கையின் சுழலில் சிக்கி ஆஸ்ட்ரேலியா அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மைக் ஹஸ்ஸி அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக தில்ஷானின் பந்தில் நேராக எல்.பி.டபிள்யூ. ஆனார்.

முன்னதாக வாட்சன், ஹியூஸ் விரவில் வெளியேற, பாண்டிங்கும், கிளார்க்கும் இணைந்து ஸ்கோரை 91 ரன்களுக்கு உயர்த்தி நேர் செய்ய விரும்பினர். ஆனால் கிளார்க் 23 ரன்களில் ஹெராத்திடம் வெளியேறினார்.

அதற்குப் பிறகு 44 ரன்கள் எடுத்த பாண்டிங்கும் ஹெராத் பந்துக்கு ஆக்ரோஷம் காட்டி மேலேறி வந்து அடித்தார் ஆனால் பந்து மட்டையில் சரியாகச் சிக்கவில்லை மிட் ஆஃபில் கேட்சாக மாறியது.

அதன் பிறகு கவாஜாவும், ஹஸ்ஸியும் இணைந்து கடினமான சூழ்நிலையில் 45 ரன்கள் ஜோடியாகச் சேர்த்தனர். ஸ்கோர் 157 ரன்களை எட்டியபோது உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்த நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெலிகேதராவிடம் பவுல்டு ஆனார்.

அதற்குள் மைக் ஹஸ்ஸி 115 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் தனது அபார அரை சதத்தை எட்டினார்.

ஹேடினும், ஹஸ்ஸியும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 48 ரன்களைச் சேர்த்தனர். ஆனால் ஹேடின் 24 ரன்கள் எடுத்திருந்தபோது சூரஜ் ரந்தீவ் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிற்கு ஜான்சன் (14), கோப்லேண்ட் (12) சேர்க்க ஹஸ்ஸி ஒருமுனையில் நிற்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்ட்ரேலியா 273 ரன்களுக்கு தன் முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

மைக் ஹஸ்ஸி 95 ரன்களில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்தார். இலங்கை அணிப் பந்து வீச்சில் லக்மல், ஹெராத் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ரந்தீவ் 2 விக்கெட்டுகளையும் தில்ஷான், வெலிகேதரா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆஸ்ட்ரேலியா இன்னிங்ஸ் 86 ஓவர்களே தாக்குப் பித்தது. நாளை இலங்கை தனது முதல் இன்னிங்ஸைத் துவங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil