லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு சற்று முன் ஸ்ட்ராஸ் விக்கெட்டை ஜாகீர் கான் வீழ்த்தினார். இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.
83 பந்துகள் போராடி 22 ரன்களை எடுத்த ஸ்ட்ராஸ், ஜாகீர் கான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய சற்றே உயரமாக வந்த பவுன்சரை புல் செய்ய முயன்றார்.
பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஃபைன் லெக் திசையில் நேராக இஷாந்திடம் கேட்ச் ஆனது. இஷாந்த் நகரவேண்டிய தேவை கூட ஏற்படவில்லை.
6-வது முறையாக ஸ்ட்ராஸை ஜாகீர்கான் வீழ்த்தியுள்ளார். ஸ்ட்ராஸைப் பற்றி போட்டிக்கு முன்பு ஜாகீர் கான் கூறியதை ஜாகீர் நிரூபித்து விட்டார்.
பீட்டர்சன் களமிறங்கிய முதல் பந்தே ஜாகீரின் பந்தில் ஆட்டமிழக்கத் தெரிந்தார். ஆனால் பந்து மட்டையின் விள்ம்பை உரசிக் கொண்டு சென்றது.