ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தை இழந்தார். ஜாக் காலீஸ் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
சபைனா பார்க்கில் சதம் எடுத்து ஆட்ட நாயகனான ராகுல் திராவிட் 9 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்.
இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா 26 இடங்கள் பேட்டிங் தரவரிசையில் முன்னேறி 61-வது இடத்திற்குள் வந்துள்ளார்.
வி.வி.எஸ். லஷ்மண் 5 இடங்கள் குறைந்து 13-வது இடத்திலும் மகேந்திர சிங் தோனி 38-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சு தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இஷாந்த் ஷர்மா மீண்டும் 11ஆம் இடத்திற்கு வந்துள்ளார்.
பந்து வீச்சில் டேல் ஸ்டெய்ன், கிரகாம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் 3 இடங்களில் உள்ளனர்.