மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கிறிஸ் கெய்லின் அதிரடி ஆட்டத்தால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போடியில் 55வது லீக் சுற்று ஆட்டத்தில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் வாட்சன் 29 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 34 ரன்களும், டிராவிட் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பெங்களூர் அணி 17 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் கெய்ல் 44 பந்தில் 6 பவுண்டரி, 4 சிக்சருடன் 70 ரன்களும், கோக்லி 39 ரன்களும் எடுத்து அவுட்டாக வில்லை. தில்சான் 38 ரன்கள் எடுத்தார்.
4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பெங்களூர் அணி வீரர் அரவிந்த் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.