புதுடெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொச்சி டஸ்கர்ஸ் அணி வீழ்த்தியது. இது டெல்லி சந்திக்கும் 6வது தோல்வியாகும்.
டெல்லியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வேணுகோபால் ராவ் 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய கொச்சி அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாத்தீவ் பட்டேல் 37 ரன்னுடனும்), ஹாட்ஜ் 24 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மெக்குல்லம் 19 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்தார்
கொச்சி டஸ்கர்ஸ் பந்து வீச்சாளர் பரமேஸ்வரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கொச்சி அணி பெற்ற 4வது வெற்றி இதுவாகும். டெல்லி அணி 6வது தோல்வியை சந்தித்துள்ளது.