Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஈடன் கார்டன் விவகாரத்தில் சதி-டால்மியா குற்றச்சாற்று

ஈடன் கார்டன் விவகாரத்தில் சதி-டால்மியா குற்றச்சாற்று
, வெள்ளி, 25 பிப்ரவரி 2011 (15:41 IST)
கொல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டதன் பின்னணியில் சதி இருப்பதாக பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் ஜக் மோகன் டால்மியா குற்றம்சாற்றியுள்ளார்.

"வங்காள கிரிக்கெட் சங்கத்திற்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. துணைக்கண்டத்தின் மற்ற ஸ்டேடியங்களுக்கு கால அவகாசம் வழங்கபட்டது, ஆனால் எங்களுக்கு கால அவகாசம் வழங்கப்படவில்லை. பிப்ரவரி 7ஆம் தேதி வரைதான் நீட்டிப்பு கேட்டிருந்தோம் ஆனால் அதுவே வழங்கப்படவில்லை.

இது சதி இல்லாவிட்டால் வேறு எதுதான் சதி? இது கிரிக்கெட் அல்ல. 1999ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் போது ஐ.சி.சி. தலைவராக நான் இருந்தேன், 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும்போதும் நான் பி.சி.சி.ஐ. தலைவராகவும் இருந்தேன். இந்த முறை வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் ஐ.சி.சி.க்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவோம் என்று உறுதியும் அளித்தோம், மேலும் கூடுதல் செலவுகளையும் கொடுக்கத் தயார் என்றும் தெரிவித்தோம்.

இந்தியா, இங்கிலாந்து போட்டிகள் நடைபெற 27 நாட்கள் இருந்தபோதும் எங்களது நியாயமான கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆனது. இது இப்படியிருக்க மற்ற விளையாட்டரங்கங்களில் பணிகள் முடிக்கப்பட நிறைய அவகாசம் தரப்பட்டது.

"கிரிக்கெட்டின் மெக்கா" என்று அழைக்கப்படும் ஈடன் கார்டனுக்கு இழைத்த மாபெரும் அநீதி ஆகும் இது. ஐ.சி.சி.யின் பிடிவாத குணத்தினால் வங்காள கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

எனக்கு இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வது எப்படி என்பது தெரியும், மும்பை போட்டியை எனக்கு நான் கேட்டிருக்க முடியும், ஆனால் நான் கேட்கவில்லை." இவ்வாறு கூறிய டால்மியா, இலங்கை பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்த அனுமதி வழங்கியது எப்படி என்பதை கேட்டுச் சொல்லுங்கள் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil