Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்ட்ரேலிய விக்கெட்டுகள் சரிவு - 108/4

ஆஸ்ட்ரேலிய விக்கெட்டுகள் சரிவு - 108/4
, செவ்வாய், 28 டிசம்பர் 2010 (10:49 IST)
415 ரன்கள் பின்னிலையில் உள்ள ஆஸ்ட்ரேலிய அணி மெல்போர்னில் இன்று தனது 2-வது இன்னிங்ஸில் சற்று முன் வரை 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று காலை 444/5 என்று துவங்கிய இங்கிலாந்து 513 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஜொனாதன் டிராட் 168 ரன்கள் எடுத்து இறுதி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பிரையர் 85 ரன்களுக்கு சிடிலிடம் ஆட்டமிழந்தார். ஸ்வான் 22 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்ட்ரேலிய தரப்பில் பீட்டர் சிடில் 75 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

415 ரன்கள் பின் தங்கியிருந்த ஆஸ்ட்ரேலிய அணி தன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.

பி.ஜே. ஹியூஸ் தேவையில்லாமல் ஒரு ரன் எடுக்க முயன்று டிராட் த்ரோவிற்கு 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வாட்சனும் பாண்டிங்கும் இணைந்து ஆடி ஸ்கோரை 99 ரன்களுக்கு உயர்த்தினர். வாட்சன் 54 ரன்கள் எடுத்து பிரெஸ்னன் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

ரிக்கி பாண்டிங் போராடி 20 ரன்களை எடுத்து எப்படியாவது நின்றாக வேண்டும் என்று விளையாடி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் 20 ரன்களில் மட்டையின் உள்விளிம்பில் பட்ட பந்தில் பவுல்டு ஆனார்.

கடைசியாக ஆஸ்ட்ரேலியாவின் முதுகெலும்பான மைக் ஹஸ்ஸி 0-வில் பிரெஸ்னன் பந்தில் ஷாட் கவர் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil