Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா? நாளை 2-வது டெஸ்ட்

Advertiesment
டெஸ்ட் தொடரை சமன் செய்யுமா இந்தியா? நாளை 2-வது டெஸ்ட்
, சனி, 25 டிசம்பர் 2010 (13:20 IST)
நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெறுகிறது.

3 டெஸ்ட் கொண்ட தொடரில் செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் மோசமான தோல்வியை தழுவியது.

முதல் டெஸ்டில் தோற்றதால் இந்திய அணிக்கு இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி தனது சொந்த மண்ணில் பேட்டிங், பந்துவீச்சில் மிகவும் வலுவாக இருப்பதால் இந்திய அணி பதிலடி கொடுக்க கடுமையாக போராட வேண்டும்.

இந்திய அணியின் பேட்டிங்கில் தெண்டுல்கர் நல்ல நிலையில் உள்ளார். இதேபோல சேவாக், காம்பீர், கேப்டன் தோனி ஆகியோரும் முதல் டெஸ்டில் நன்றாக ஆடினார்கள்.

அனுபவம் வாய்ந்த டிராவிட், லட்சுமண் ஆகியோர் முதல் டெஸ்டில் சரியாக விளையாடவில்லை. இவர்களது பேட்டிங் மிகவும் முக்கியமானது. ரெய்னாவின் பேட்டிங் மோசமாக இருந்தது. இதனால் அவருக்கு பதிலாக புஜராவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

தோனியின் நம்பிக்கை ரெய்னா மீது இன்னும் இருப்பதால் அவர் நீக்கப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. பேட்ஸ்மேன்கள் மிகப் பெரிய ரன்களை குவித்து வெற்றி பெற முடியா விட்டாலும் தோல்வியை தவிர்க்க இயலும்.

இந்திய வீரர்களின் பந்துவீச்சு மோசமாகவே இருந்தது. முன்னணி வேகப் பந்து வீரர் ஜாகீர்கான் உடல் தகுதி இல்லாத தால் முதல் டெஸ்டில் ஆடவில்லை. நாளைய டெஸ்டில் அவர் ஆடுகிறார். அவரது வருகையால் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஷாந்த் சர்மா, ஸ்ரீசாந்த் ஆகியோரது வேகப்பந்து வீச்சு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அவர்களது பந்து வீச்சில் முன்னேற்றம் தேவை. ஆடுகளம் வேகப் பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கலாம்.

தென்ஆப்பிரிக்கா பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் ஹசிம் ஆம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் ஸ்டெயின், மார்னே மார்கல் கலக்கி வருகிறார்கள். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு இந்த இருவரும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறார்கள்.

இந்திய நேரப்படி இந்த டெஸ்ட் போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. டென் கிரிக்கெட் சேனலில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணி வீரர்கள் வருமாறு:-

இந்தியா: தோனி (கேப்டன்), சேவாக் (துணை கேப்டன்), கம்பீர், டிராவிட், டெண்டுல்கர், லட்சுமண், ரெய்னா, ஹர்பஜன்சிங், ஜாகீர்கான், ஸ்ரீசாந்த், இஷாந்த்சர்மா, முரளிவிஜய், புஜாரா, ஒஜா, உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உன்கட், விர்த்திமான் சகா.

தென்ஆப்பிரிக்கா: ஸ்மித் (கேப்டன்), ஹசிம் அம்லா, காலிஸ், டிவில்லியர்ஸ், ஆஸ்வெல் பிரின்ஸ், மார்க் பவுச்சர், ஸ்டெயன், அல்பி மார்கல், பால் ஹாரிஸ், மெக்லரன், டுமினி, பெர்னல், பீட்டர்சன், டிசோட்சோபே.

Share this Story:

Follow Webdunia tamil