Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி- தோனி

Advertiesment
காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி- தோனி
, சனி, 25 டிசம்பர் 2010 (12:00 IST)
சச்சின் டெண்டுல்கர் நவீன காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுவது டான் பிராட்மேனைவிட சிறப்பாக சாதனை புரியக் காரணம் என கருதுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

பிராட்மேன், சச்சின் பேட்டிங் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தோனி அளித்த பதில்:

அவர்கள் இருவரையும் ஒப்பிடமுடியாது. பிராட்மேன் விளையாடி காலம் வேறு, சச்சின் விளையாடும் காலம் வேறு. அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சின் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் திகழ்வதற்கு காரணம், அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுபவர். அவர் இப்போது அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறிய தோனி, குவாலியர் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இரட்டைச் சதம் அடித்ததையும் நினைவுகூர்ந்தார்.

கிரிக்கெட்டின் பிதாமகர் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன் 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் மறைந்தார். 52 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவரின் சராசரி 99.94 என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil