சென்சூரியன் மைதானத்தில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அபார சதத்தால் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் எடுத்துள்ளது.
தொடக்க வீரர்கள் அபாரமாக விளையாடினாலும் திராவிட் 43 ரன்னில் ஆட்டம் இழந்தது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அழிந்தது. இதைத் தொடர்ந்து வந்த சச்சின் அபாரமாக விளையாடி இந்தியா அணியை கவுரமாக தலைநிமிரச் செய்தார்.
அபாரமாக விளையாடி சச்சின் தனது 50வது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் விளையாடிக் கொண்டிருந்த தோனி 90 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
தற்போது இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 454 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 107 ரன்னிலும், ஸ்ரீசாந்த் 3 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால் இந்தியா தோல்வி அடைவதும், டிரா செய்வதும் சச்சின் கையில் உள்ளது.
இதனிடையே சச்சினுக்கு பிரதமர், சோனியா, பாஜக தலைவர் நிதின் கட்கரி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.