Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யூசுப் பத்தான் அபார சதம் இந்தியா வெற்றி

யூசுப் பத்தான் அபார சதம் இந்தியா வெற்றி
, புதன், 8 டிசம்பர் 2010 (11:28 IST)
பெங்களூரில் நடைபெற்ற இந்திய-நியூசீலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது ஒரு நாள் போட்டியில் யூசுப் பத்தானின் நம்ப முடியாத அதிரடியால் இந்திய அணி 321 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டபோது இந்தியா பின் தங்கியிருந்தது. ஆனால் மழை நின்ற பிறகு ஆட்டம் துவங்கிய முதல் பந்தே யூசுப் பத்தான் பேட்டிலிருந்து சிக்சருக்குச் சென்றது.

96 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களூடன் 123 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் யூசுப் பத்தான்.

அவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம்பெற்றுத்தரும் இன்னிங்சை ஆடியுள்ளார் பத்தான்.

48.5 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற்றது. ஆனால் இடது கை ஜார்கண்ட் வீரர் சௌரப் திவாரியின் பங்களிப்பை நாம் மறக்க முடியாது. அவர் 39 பந்துகளில் 3 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 37 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

அவர் அடித்த சிக்ஸ்தான் மறக்க முடியாத வெற்றி சிச்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

யூசுப் பத்தான் இன்று ஆடிய ஆட்டம் அவரது கிரிக்கெட் வாழ்வின் திருப்புமுனையாகும்.

ஏனெனில் அவர் களமிறங்கும் போது இந்திய அணி 108/4 என்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அனுபவ வீரர் யுவ்ராஜ் சிங் முன்பு செய்ததை இன்று பத்தான் செய்தார்.

பார்தீவ் படேல், ரோஹித், விராட் கோலி, ரெய்னா என்று இந்திய இளம் தலைமுறை தங்களைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டு வருகின்றனர். இது ஆரோக்கியமான ஒரு அறிகுறி.

யூசுப் பத்தானின் ஆட்டம் இன்று வர்ணிக்கமுடியாத நிலைக்குச் சென்றது. அவர் அடித்த சிக்சர்கள் பவுலர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

பந்து வீச்சிலும் அவர் 3 விக்கெட்டுகளை இன்று வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் உலகக் கோப்பை அணியில் ஆல்-ரவுண்டர் இடத்தைப் பூர்த்தி செய்வது யூசுப் பத்தானாகவே இருக்க முடியும் என்பதை அவர் இன்று நிரூபித்துள்ளார்.

இவரும் சௌரப் திவாரியும் இணைந்து 15.3 ஓவர்களில் 133 ரன்களைக் குவித்தனர் ஆனால் இதில் திவாரியின் பங்களிப்பு 37 ரன்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா இந்தத் தொடரில் 4-0 என்று முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil