Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 276 ரன்கள்

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா 276 ரன்கள்
, ஞாயிறு, 28 நவம்பர் 2010 (12:37 IST)
குவாஹாத்தியில் நடைபெறும் இந்திய-நியூஸீலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் ஆடிய இந்தியா விராட் கோலியின் அபார அதிரடி சதத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 276 ரன்களுக்கு 49 ஓவர்களில் ஆட்டமிழந்தது.

கடைசி 10 ஓவர்களில் 64 ரன்களே எடுக்க முடிந்தது. பவர் பிளேயில் 38 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

கடைசி 5 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது இந்தியா.

முன்னதாக கம்பீர், விஜய் ஓரளவுக்கு நல்ல துவக்கம் கொடுத்து ஆட்டமிழ்ந்த பிறகு யுவ்ராஜ், கோலி இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 19 ஓவர்களில் 88 ரன்களைச் சேர்த்தனர்.

யுவ்ராஜ் சிங் முதலில் ஒன்றொன்றாக எடுத்து வந்தவர் பிறகு நேதன் மெக்கல்லம் ஓவரில் ப்வுண்டரிகளாக அடிக்கத் துவங்கினார். அவர் 64 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அபாயகரமாகத் தெரிந்தபோது டேரல் டஃபி நல்ல பந்தை வீசி அவரை வீழ்த்தினார்.

பிறகு ரெய்னாவும் சோபிக்கவில்லை பவர் பிளே எடுத்ததால் அடிக்கச் சென்ற ரெய்னா 13 ரன்களில் டீப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விரட் கோலி அபாரமாக விளையாடி தொடர்ச்சியாக தனது இரண்டாவது ஒரு நாள் சதத்தை எடுத்து 105 ரன்களில் ஆட்டமிழந்தார்.

யூசுப் பத்தான் இந்திய அணியின் ஒரே சிக்சரை அடித்தார் அவர் 19 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

நியூஸீலாந்து அணியில் கிளென்ட் மெக்காய் 10 ஓவர்களில் 62 ரன்களைக் கொடுத்தாஅலும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கைல் மில்ஸ் 42 ரன்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூஸீலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லமும், டேனியல் வெட்டோரியும் இல்லை எனவே ராஸ் டெய்லர் கேப்டன் பொறுப்பில் நீடிக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil