சச்சின், திராவிட் ஆகியோரின் அரைசதத்தால் இந்தியா அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது நியூஸிலாந்து அணியை விட 99 ரன்கள் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
தொடக்க வீரர் சேவாக் அதிரடியாக விளையாடி 50 பந்தில் அரை சதம் எடுத்தார். இது இவரின் 26வது அரை சதமாகும். மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் தனது 13வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
73 பந்தில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது டெட்டோரி பந்தில் சேவாக் ஆட்டம் இழந்தார். இதில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதைத் தொர்டர்ந்து கம்பீர் 78 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் களம் இறங்கி திராவிட் நிதானமாக விளையாடி தனது 60வது அரை சதத்தை நிறைவு செய்தார். மறுமுனையில் விளையாடி வந்த சச்சினும் தனது 59 வது அரை சதத்தை பூர்த்தி செய்தார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக சச்சின் எடுக்கும் 8வது அரை சதமாகும்.
2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 292 ரன்கள் எடுத்துள்ளது. சச்சின் 57 ரன்னிலும், திராவிட் 69 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.
சச்சின் 50 வது சதம் அடிக்க இன்னும் 43 ரன்கள் மட்டுமே தேவை. அநேகமாக நாளை தனது 50வது சதத்தை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது நியூஸிலாந்து அணியைவிட இந்திய அணி 99 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.