தொடக்க வீரர்கள் சேவாக், கம்பீர் ஆகியோரின் அபார அரை சதத்தால் நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் குவித்துள்ளது.
தொடக்க வீரர் சேவாக் அதிரடியாக விளையாடி 50 பந்தில் அரை சதம் எடுத்தார். இது இவரின் 26வது அரை சதமாகும். மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் தனது 13வது அரை சதத்தை நிறைவு செய்தார்.
73 பந்தில் 74 ரன்கள் எடுத்திருந்தபோது டெட்டோரி பந்தில் சேவாக் ஆட்டம் இழந்தார். இதில் ஒரு சிக்சர், 12 பவுண்டரிகள் அடங்கும்.
இதைத் தொர்டர்ந்து கம்பீர் 78 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
பின்னர் களம் இறங்கி திராவிட் நிதானமாக விளையாடி 35 ரன் எடுத்துள்ளார். சச்சின் 4 ரன்னில் களத்தில் உள்ளார்.
தற்போது இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது.