அகமதாபாத் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாள் ஆட்டத்தில் நியூஸீலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து இந்த நாளை திருப்தியுடன் முடித்துள்ளது.
ஜெஸ்ஸி ரைடர் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு எதிராக தன் 3-வது சதத்தை ஆட்டம் முடியும் முன்பு எடுத்து அடுத்த பந்தே ஸ்ரீசாந்தின் ஸ்விங்கான பந்துக்கு எல்.பி.டபிள்யூ.ஆனார்.
இன்று காலை உணவு இடைவேளைக்கு முன் மெக்கல்லம், டெய்லர் சற்றே எச்சரிக்கையுடன் துவங்கி பிறகு அடிக்கத் துவங்கினர்.
ஆனால் மெக்கல்லம், டெய்லர் இருவரும் அரை சதம் எடுத்து பெவிலியன் திரும்ப நியூஸீலாந்து 137/4 என்று ஆனது.
ஆனால் அதன் பிறகு ஜெஸ்ஸி ரைடர், தன் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடும் கேன் வில்லியம்ஸ் இணைந்து இந்திய பந்து வீச்சை பொறுமையுடன் எதிர்கொண்டனர். ரைடருக்கு ஒரு கேட்சை திராவிட் கோட்டை விட்டார்.
மற்றபடி இருவௌம் பந்துகள் திரும்பவே திரும்பாத ஆட்டக்களத்தில் சிறப்பகவே விளையாடினர். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்காக 194 ரன்கள் சேர்த்தனர்.
ரைடர் 205 பந்துகளைச் சந்தித்து 10 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 103 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
கேன் வில்லியம்ஸன் 226 பந்துகளைச் சந்தித்து 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஃபாலோ ஆனைத் தவிர்த்த நியூஸீலாந்து நாளை உணவு இடைவேளை வரை தாக்குப்பீடித்தால் ஆட்டம் டிராவை நோக்கி நகரவே வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.