வங்கதேச அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரஃபே மோர்டசா பொறுப்பேற்றார். ஷாகிப் அல் ஹஸன் துணை கேப்டன் ஆனார்.
பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணிக்கு தற்போது மஷ்ரஃபே மோர்டசா கேப்டனாக இருப்பார். தொடர்ந்து கூட மோர்டசாவே நீடிப்பார் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மஷ்ரஃபே மோர்டசாதான் முதலில் கேட்பன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் கேப்டன் பொறுப்பு மேற்கிந்திய பயணத்தில் 6 ஓவர்களுடன் முடிந்தது. ஏனெனில் அவர் காயமடைந்தார்.
அதன் பிறகும் தொடர்ந்து அவர் காயத்திலிருந்து மீண்டு வர இயலாமல் போனதால் ஷாகிப் அல் ஹஸன் கேப்டன் பொறுப்பில் இருந்தார்.
தற்போது மீண்டும் மோர்டசா வசம் பொறுப்பு வந்துள்ளது. இதில் வேறு ஒன்றும் இல்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளத்து.
ஆனால் அணியின் உதவிப் பயிற்சியாளர் காலேத் மமுத் இந்த முடிவு ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார்.