Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்ட்ரேலியா 3ஆம் இடத்தை இழக்கலாம்

Advertiesment
ஆஸ்ட்ரேலியா 3ஆம் இடத்தை இழக்கலாம்
, வியாழன், 24 டிசம்பர் 2009 (18:49 IST)
கிறிஸ்மஸ் தினத்திற்கு மறு நாள் மெல்போர்னில் துவங்கவுள்ள ஆஸ்ட்ரேலியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முதல் ஆஸ்ட்ரேலியா ஆதிக்கம் செலுத்தி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தினால் மட்டுமே ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்ட்ரேலியா தன் 3-வது இடத்தை தக்க வைக்க முடியும்

தொடரை ஆஸ்ட்ரேலியா 1- 0 என்றோ, அல்லது 2- 1 என்றோ கைப்பற்றினால் கூட அதன் தரவரிசைப்புள்ளிகள் குறைந்து இலங்கைக்குக் கீழ் 4-வது இடத்திற்கு இறங்கிவிடும்.

2- 0 என்று வெற்றி பெற்றால் 116 புள்ளிகள் பெற்று 3ஆம் இடத்தை தக்கவைக்க முடியும்.

மாறாக பாகிஸ்தான் தொடரை கைப்பற்றினால் ஆஸ்ட்ரேலியாவின் தரவரிசைப் புள்ளிகளில் சரிவு ஏற்படும்.

டிசம்பர் 26ஆம் தேதி பாக்ஸிங் டே டெஸ்ட் என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியில் உமர் குல் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

எனினும் டேனிஷ் கனேரியா, சயீத் அஜ்மல் என்று இரண்டு ச்பின்னர்களையும், ஆசிஃப், ஆமீர் என்ற இரண்டு வேகப்பந்து வீச்சாளரையும் பாகிஸ்தான் விளையாட வைக்க திட்டமிட்டுள்ளது.

ஆஸ்ட்ரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் விளையாடுவாரா என்பது நாளை தெரியவரும்.

Share this Story:

Follow Webdunia tamil