நேப்பியரில் நடந்து வரும் நியூஸீலாந்து அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் எடுத்த இந்திய வீரர் கெளதம் காம்பீர் டெஸ்ட் போட்டியில் 2,000 ரன்களை கடந்தார்.
2,000 ரன்களை கடந்த இந்திய வீரர்களின் 30வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் காம்பீர்.
24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள காம்பீர், சராசரி 50 வைத்துள்ளார். இது இவரது 5வது டெஸ்ட் சதம் ஆகும்.
குறுகிய போட்டியில் 2,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ராகுல் திராவிட், சேவாக், விஜய் ஹாசரி, கெளதம் காம்பீர், சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
25 டெஸ்ட் போட்டிகளில் 40 இன்னிங்சில் விளையாடி 3 சதம், 15 அரை சதம் எடுத்துள்ளார் ராகுல் திராவிட். இவரது டெஸ்ட் சராசரி 55.55
25 டெஸ்ட் போட்டிகளில் 40 இன்னிங்சில் விளையாடி 7 சதம், 6 அரை சதம் எடுத்துள்ளார் சேவாக். இவரது டெஸ்ட் சராசரி 51.28
26 டெஸ்ட் போட்டிகளில் 43 இன்னிங்சில் விளையாடி 7 சதம், 8 அரை சதம் எடுத்துள்ளார் விஜய் ஹாசரி. இவரது டெஸ்ட் சராசரி 55.55
24 டெஸ்ட் போட்டிகளில் 43 இன்னிங்சில் விளையாடி 5 சதம், 11 அரை சதம் எடுத்துள்ளார் கெளதம் காம்பீர். இவரது டெஸ்ட் சராசரி 51.28
23 டெஸ்ட் போட்டிகளில் 44 இன்னிங்சில் விளையாடி 8 சதம்,10 அரை சதம் எடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர். இவரது டெஸ்ட் சராசரி 52.63
32 டெஸ்ட் போட்டிகளில் 44 இன்னிங்சில் விளையாடி 7 சதம், 10 அரை சதம் எடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இவரது டெஸ்ட் சராசரி 51.28