Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வினோத் காம்பிளி அரசியலில் நுழைந்தார்

வினோத் காம்பிளி அரசியலில் நுழைந்தார்
, புதன், 4 பிப்ரவரி 2009 (18:57 IST)
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை பேட்ஸ்மென் வினோத் காம்பிளி லோக் பாரதி என்ற மும்பையைச் சார்ந்த லோக் பாரதி என்ற கட்சியில் தேசிய துணைத் தலைவராக பொறுப்பேற்றார்.

செய்தியாளர்களிடம் இது குறித்து இன்று மும்பையில் பேசிய வினோத் காம்பிளி "நவம்பர் 26ஆம் தேதி மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு நான் உட்பட மும்பை மக்கள் மாற்றத்தை நாடி வந்தனர், மேலும் ஒரு புதிய அரசியலை கோருகின்றனர். எனவே நானும் இதன் தேவையை உணர்ந்து அரசியலில் நுழைந்தேன்" என்றார்.

மற்ற பெரிய கட்சிகளிலிருந்து தனக்கு அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தாலும், லோக் பாரதி கட்சியினர் பணியாற்றுவதை அருகில் இருந்து நான் கவனித்துள்ளேன் கல்வியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இவர்கள் அயராது பணியாற்றி வருகின்றனர் என்று கூறிய வினோத் காம்பிளி தானே +2 தேர்வில் தோல்வியடைந்தவந்தான் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil