பெங்களூர்: தெற்கு மண்டலம்-மத்திய மண்டலம் ஆகிய அணிகளுக்கு இடையிலான 4-நாள் துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தெற்கு மண்டல அணி ராகுல் திராவிட் (118), தினேஷ் கார்த்திக் (103) ஆகியோரது சதங்களால் தன் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்துள்ளது.
இதம் மூலம் 3ஆம் நாள் ஆட்ட முடிவில் லக்ஷ்மண் தலைமை தெற்கு மண்டலம் 342 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
முன்னதாக மத்திய மண்டலம் தன் முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தேகு மண்டலத்தை காட்டிலும் 3 ரன்கள் குறைவாக எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தெற்கு மண்டலம் உத்தப்பா, முகுந்த், பத்ரி நாத் விக்கெட்டுகளை இழந்து 24/3 என்று இருந்த போது திராவிடும் யாதவும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 154 ரன்களை சேர்த்தனர். யாதவ் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
திராவிட் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் முதல் இன்னிங்ஸில் எடுத்த அதிரடி சதத்துடன் இரண்டாவது இன்னிங்ஸிலும் அதிரடி முறையில் விளையாடி 120 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 1103 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
மத்திய மண்டல அணியில் பங்கஜ் சிங், புவனேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
நாளை ஆட்டத்தின் இறுதி நாள்.