தமிழ்நாடு-உத்திரப்பிரதேச அணிகளுக்கு இடையே நாக்பூரில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் தமிழ் நாடு அணி தன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்துள்ளது.
பூவா தலையா வென்ற தமிழ்க அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். துவக்க வீரர் இடது கை பேட்ஸ்மென் அபினவ் முகுந்த் 100 ரன்களை எத்த்தார்.
விஜய் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 167 ரன்களை சேர்த்தனர். நேற்று இந்த 2 விக்கெட்டுகளை மட்டுமே உத்திரப்பிரதேச அணி சய்க்க முடிந்தது.
தினேஷ் கார்த்திக் 58 ரன்களுடனும், பத்ரிநாத் 59 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.