Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிட்னி: தென் ஆப்பிரிக்கா 251/5

Advertiesment
சிட்னி: தென் ஆப்பிரிக்கா 251/5
, வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:49 IST)
சிட்னியில் ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெறும் 3-வது இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் தேனீர் இடைவேளையின் போது 5 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்துள்ளது.

மார்க் பௌச்சர் 39 ரன்களுடனும், மோர்னி மோர்கெல் 23 ரன்களுடனும் விளையாடுகின்றனர். இன்று 125/1 என்று துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி 4 மணி நேர ஆட்டத்தில் 126 ரன்களை மட்டுமே சேர்த்து 4 முக்கிய விக்கெட்டுகளை பறி கொடுத்தது.

முதலில் ஜாக் காலிஸ் 37 ரன்கள் எடுத்து மிட்செல் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஹஷிம் அம்லா தனது அபாரமான அரைசதத்தை எட்டினார். ஆனால் டீவிலியர்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். இவரது ரன் அவுட்டிற்கு காரணமானவர் மிட்செல் ஜான்சன்.

இவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களிலேயே ஹஷிம் அம்லா 51 ரன்களை எடுத்து புது முக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மெக்டொனால்டிடம் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்காவின் நெருக்கடி நாயகன் பால் டுமினி இந்த முறை சோபிக்க வில்லை இவரும் ஜான்சனிடம் எல்.பி.டபிள்யூ ஆனார்.

தற்போது மார்க் பௌச்சர், மோர்கெல் இணைந்து 6ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

ஆஸ்ட்ரேலிய அணியில் புது முக இடது கை வேகப்பந்து வீச்சாளர் மெக்டொனால்ட் 14 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்து ஹஷிம் அம்லாவை வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தின் சிறப்பம்சமாகும்.

ஜான்சன் 2 விக்கெட்டுகளையும், சிடில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். காயமடைந்த கிரேம் ஸ்மித் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவர் மீண்டும் களமிறங்குவது சந்தேகமே.

Share this Story:

Follow Webdunia tamil