Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரட் லீ அபாரம்; நியூஸீ.இன்னிங்ஸ் தோல்வி

பிரட் லீ அபாரம்; நியூஸீ.இன்னிங்ஸ் தோல்வி
, திங்கள், 1 டிசம்பர் 2008 (12:00 IST)
அடிலெய்டில் நடைபெற்ற 2-வது இறுதி டெஸ்டில் ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நியூஸீலாந்து அணி ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இதன் மூலம் ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரை 2- 0 என்று கைப்பற்றியது. 4ஆம் நாளான இன்று 35/0 என்று களமிறங்கிய நியூஸீலாந்து இரண்டாவது இன்னிங்சில் 203 ரன்களுக்கு சுருண்டது. பிரட் லீ அபாரமாக வீசி 5 விக்கெட்டுகளையும், மிட்செல் ஜான்சன் 3 விக்கெட்டுகளையும் நேதன் ஹாரிட்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ரெட்மாண்ட், ஜேமி ஹவ், ரைடர் ஆகியோரை பிரட் லீ வந்தவுடனேயே வீழ்த்தினார். அதன் பிறகு டெய்லர், ஃபுல்டன், ஃபிளின் ஆகியோரும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர் இதனால் 84/6 என்று நியூஸீலாந்து தோல்வியை நோக்கி சரிந்தது.

மெக்குல்லம் மட்டுமே சிறப்பாக விளையாடி 84 ரன்களை விளாசினார்.

ஆஸ்ட்ரேலிய அணியின் முதல் இன்னிங்சில் 169 ரன்களை விளாசிய பிராட் ஹேடின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முதல் டெஸ்டில் 98 ரன்களையும் இந்த டெஸ்டில் 110 ரன்களையும் எடுத்த மைக்கேல் கிளார்க் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த தோல்வி மூலம் நியூஸீலாந்து அணி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆகிய அணிகளுடன் ஆஸ்ட்ரேலியாவிடமும் தொடரை இழந்துள்ளது.

ஒரு விசித்திரமான புள்ளி விவரம் என்னவெனில் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ள ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, இது வரை ஒரு இன்னிங்ஸில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை என்பதும், இது போண்று இவருக்கு மட்டுமே நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோர்:

ஆஸ்ட்ரேலியா 535 ஆல் அவுட்

பாண்டிங் 79
ஹஸ்ஸி 70
கிளார்க் 110
பிராட் ஹேடின் 169.

நியூஸீலாந்து அணி 270 மற்றும் 203 ரன்கள்

பிரட் லீ 9/171 (இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து)

Share this Story:

Follow Webdunia tamil