Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சினுக்கு மெக்ரா, ரிச்சர்ட்ஸ் புகழாரம்!

சச்சினுக்கு மெக்ரா, ரிச்சர்ட்ஸ் புகழாரம்!
ஒவ்வொரு முறை சச்சின் செய்தியாளர்களை சந்திக்கும்போதும் அவரது ஓய்வு குறித்த கேள்விகள் துளைக்கும் சூழ்நிலையில், உலகின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுல் ஒருவரான கிளென் மெக்ராவும், முன்னாள் அதிரடி மன்னன் விவியன் ரிச்சர்ட்சும் சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்வு குறித்து புகழ்ந்து பேசியுள்ளனர்.

அதாவது டெண்டுல்கர் போன்ற வீரருக்கு அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை தேர்வு செய்யும் உரிமை இருக்கிறது. அவரே அதனைத் தேர்வு செய்ய தகுதி பெற்றுள்ளார், என்ற கருத்தில் ரிச்சர்ட்ஸ், மெக்ரா, இந்திய பேட்ஸ்மென் சேவாக் மூவரும் ஒத்த கருத்தை வெளியிட்டுள்ளனர்.

மெக்ரா தனது பத்திரிக்கை பத்தி ஒன்றில் எழுதும்போது, 16 வயதில் சச்சின் எவ்வளவு உற்சாகம் அளித்தாரோ, அதே அளவு உற்சாகத்தை தற்போதும் அளிக்கிறார் என்று எழுதியுள்ளார்.

"சச்சினின் மனோ பலத்தை விமர்சகர்கள் புள்ளி விவரங்களை வைத்து குறைவாக எடை போடுவது வருத்தத்தை அளிக்கிறது. அதாவது இரண்டாவது இன்னிங்சில் அவரது சராசரி அல்லது இறுதிப் போட்டிகளில் அவரது மோசமான சராசரி என்று துருவுகின்றனர். சச்சினின் கிரிக்கெட் வாழ்வை இது போன்று துருவி ஆய்வது அவர் மீது காட்டப்படும் கடுமையான விஷயமாகவே பார்க்கிறேன்" என்றார்.

"அவர் தன் கிரிக்கெட் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறார் என்று நான் அறிவேன், ஆனால் ஆட்டத்தை விளையாட தனக்கு உந்துதல் இல்லை என்ற காலக்கட்டத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை அவர் ஏற்கனவே பெற்றுவிட்டார். மேலும் தற்போது அவர் நிதி அளவில் சிறந்து விளங்குவதால், கிரிக்கெட்டிற்கான உந்துதல் பெறுவது அவர் கையில் உள்ளது, இதை அவர் பெற்று விட்டார் என்றால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும்" என்றார்.

மேற்கிந்திய முன்னாள் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்ஸ் இன்னும் ஒரு படி மேலே போய், "டெண்டுல்கர் தொடர்ந்து விளையாடுகிறார் என்றால் அது கிரிக்கெட் ஆட்டத்தின் மீது அவருக்கு இருக்கும் காதலையே காட்டுகிறது, அவரது பேட்டிங்கை சராசரிகள் வைத்து முடிவெடுக்காமல், தொடர்ந்து நாம் மகிழ்ச்சியாக பார்க்க வேண்டும் என்று எழுதியுள்ளார்.

அவர் ஓய்வு அறிவிக்கும் தினத்தை எதிர்பார்ப்பதை தவிர்த்து, மீதமுள்ள அவரது கிரிக்கெட்டை பார்த்து மகிழ்வதே சிறந்தது என்றார்.

இந்திய வீரர் சேவாக், சச்சின் பற்றி கூறுகையில், "பயணத்தை மகிழ்வுடன் மேற்கொள்ளவேண்டும், முடிவுகளை அல்ல, சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டிற்கென்றே பிறந்தவர். விமான நிலையத்தில் காத்திருக்கும்போதும், விமானத்தில் பறக்கும்போதும் கூட அவர் கிரிக்கெட்டைப் பற்றித்தான் பேசுவார். அவர் எப்போதும் கிரிக்கெட் ஆட்டம் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்" என்று கூறியுள்ள சேவாக் "சச்சின் கிரிக்கெட்டின் கடவுள்" என்றார்.

அவரது பேட்டிங் உத்தி, அவரது கவனம், என்று அவரது கிரிக்கெட் அனைத்தையும் நான் பெற விரும்புகிறேன் என்றார் சேவாக்.

Share this Story:

Follow Webdunia tamil