பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தினால் நீக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஆசிஃப் போட்டி கிரிக்கெட் அமைப்பான இந்தியன் கிரிக்கெட் லீக் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
நடந்து முடிந்த முதல் ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டிகளின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தினை எடுத்துக் கொண்டதாக ஆசிஃப் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடை செய்திருந்தது.
தற்போது இவர் விவகாரம் இழுபறியாக உள்ள நிலையில் ஆசிஃப் ஐ.சி.எல்-இல் விளையாடும் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் உறுதியாகியுள்ளன.