Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி முதலிடம்!

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி முதலிடம்!
, வெள்ளி, 29 ஆகஸ்ட் 2008 (11:17 IST)
PTI PhotoFILE
ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி முதலிடம் பிடித்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தனது சிறப்பான ஆட்டம் மற்றும் செயல்பாட்டின் மூலம் இந்திய அணிக்கு தொடர் வெற்றியை அளித்தார். இதன் காரணமாக இலங்கை மண்ணில் முதன் முறையாக இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

இலங்கை ஒருநாள் தொடரில் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் தோனி 192 ரன் (சராசரி 48) குவித்துள்ளார். இந்திய வீரர்களில் அதிக ரன் குவித்தவரும் அவரே. இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தோனி 803 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக தென்ஆப்ரிக்காவின் கிரேம் ஸ்மித் 776 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்‌ட்ரேலியா வீரர் ரிக்கி பாண்டிங் 751 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil