இலங்கைக்கு எதிராக தற்போது கொழும்பு நகரில் நடைபெற்று வரும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், துவக்க வீரர்கள் கோக்லி, காம்பீர் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவுக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்த விராத் கோக்லி, 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். அப்போது அணியின் ரன் எண்ணிக்கை 39 ஆக இருந்தது. இதன் பின்னர் யுவராஜ் சிங் களமிறங்கினார்.
கோக்லி ஆட்டமிழந்த சில நிமிடங்களில் கவுதம் காம்பீரும் வெளியேறினார். 8 ரன்கள் எடுத்திருந்த அவர், குலசேகரா பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. யுவராஜ் 12 ரன்களுடனும், சுரேஷ் ரெய்னா 4 ரன்களுடனும் விளையாடிக் கொண்டிருந்தனர்.