Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லஷ்மண் அரைசதம்; ஹர்பஜன் அவுட்: இந்தியா-266/8

Advertiesment
லஷ்மண் அரைசதம்; ஹர்பஜன் அவுட்: இந்தியா-266/8
, திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:23 IST)
கொழும்பில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்துள்ளது. இந்திய வீரர் லஷ்மண் 34வது டெஸ்ட் அரைசதத்தை பதிவு செய்துள்ளார்.

போட்டியின் 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன் சேர்த்திருந்த இந்திய அணி, 4ம் நாளான இன்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து வருகிறது. 2வது இன்னிங்சில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திராவிட் 68 ரன்கள் எடுத்த நிலையில் மெண்டிஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் கும்ப்ளே 9 ரன்களும், ஹர்பஜன் சிங் 26 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இன்னிங்சின் 85வது ஓவர் முடிவில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்திருந்தது. லஷ்மண் 60 ரன், ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.

இலங்கை பந்துவீச்சாளர்களில் மெண்ட்ஸ் 3 விக்கெட்டும், தம்மிகா பிரசாத், முரளிதரன் தலா 2 விக்கெட்டும், சமிந்தா வாஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil