காலே கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 4ம் நாளான ஞாயிறன்று, இந்தியாவிற்கு எதிராக 307 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி வீரர்கள் சமரவீரா, தில்ஷான் இணை சிறப்பாக ஆடி சரிவில் இருந்து மீட்டது.
சமரவீரா 117 பந்துகளில் 63 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தில்ஷான் 47 பந்துகளில் 37 ரன் சேர்த்து இஷாந்த் சர்மா பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
தற்போது சமரவீராவுடன் சமிந்தா வாஸ் இணை சேர்ந்துள்ள நிலையில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 130 ரன் எடுத்துள்ளது.
துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை சமரவீரா - தில்ஷான் இணை காப்பாற்றியது.
முன்னதாக இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஸ்கோர் விவரம்:
இந்தியா:
முதல் இன்னிங்ஸ் - 329
2-வது இன்னிங்ஸ் - 269.
இலங்கை:
முதல் இன்னிங்ஸ் - 292
2-வது இன்னிங்ஸ் 43 ஓவரில் 130/6.