ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு முதல் நாள் இந்திய வீரர்கள் யுவ்ராஜ் சிங், ரோஹித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் கராச்சியில் கடற்கரை இரவு விருந்தில் கலந்து கொண்டனர் என்ற செய்தி முற்றிலும் தவறு என்றும் இதனால் இந்த 3 வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட்ட் கட்டுப்பாட்டு வாரியத் துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா தெரிவிக்கையில், "உருது தினசரியில் வெளியான இந்த செய்தி முற்றிலும் தவறு, மேலும் அவர்கள் கடற்கரை விருந்தில் கலந்து கொண்டதாக பிரசுரம் செய்யப்பட்ட புகைப்படங்கள் ஆஸ்ட்ரேலியா பயணத்தின் போது சிட்னியில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம், எனவே இம்மூன்று வீரர்கள் மீதும் எந்த ஒரு விசாரணையோ, நடவடிக்கையோ கிடையாது" என்று கூறினார்.
ஜாம்ஷெட்பூருக்கு தன் சொந்த விஷயம் காரணமாக வருகை தந்த ஷுக்லா அங்கு செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.