ஓய்வு பெற்ற ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராவின் மனைவி ஜேன் மெக்ரா சிட்னியில் நேற்று காலமானார். அவருக்கு வயது 42.
கடந்த சில காலமாக இவர் மார்பகப் புற்று நோயால் அவதியுற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பகப் புற்று நோயாளிகளை கவனிப்பதற்காக தனது கணவனுடன் சேர்ந்து மெக்ரா அறக்கட்டளையை உருவாக்குவதில் கிளென் மெக்ராவிற்கு உறுதுணையாக இருந்தார் ஜேன்.
ஜேன் உயிர் பிரியும் போது கிளென் மெக்ராவும், குழந்தைகள் ஜேம்ஸ், ஹோலி ஆகியோரும் உடனிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ட்ரேலிய அணி வீரர்கள் சார்பாக அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார்.