சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் தாங்கள் மிகவும் மோசமாக விளையாடியதாக பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக எளிதாக வென்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 112 ரன்களை மட்டுமே குவித்தது. இந்த எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14.5 ஓவரில் ஒருவிக்கெட்டை இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதுகுறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங் கூறுகையில், "இந்தப் போட்டித் தொடரிலேயே நாங்கள் மிகவும் மோசமாக ஆடியது இந்தப் போட்டியில்தான். ஆடுகளம் சாதகமாகவே இருந்தாலும் 40 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை" என்றார்.