டென்னிஸ் பந்தில் ஆடப்படும் கிரிக்கெட் ஆட்டம் ஒரு கிரிக்கெட் ஆட்டமாக கருதப்பட மட்டாது என்று குஜராத் உயர் நீதிமன்றம் விசித்திர வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்துள்ளது.
குஜராத்தில் வசித்து வரும் ஜிக்னேஷ் படேல் என்பவர் ஒரு தொடக்கப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்தபோது விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் கூடுதல் 5 விழுக்காடு மதிப்பெண்ணிற்கு தனக்கு தகுதி உண்டு என்று கோரியும் தான் தேசிய அளவில் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றதற்காக தான் ஒரு விளையாட்டு வீரர் என்ற தகுதியையும் கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த விசித்திரமான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதி பிரசாத் தனது தீர்ப்பில், " டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஒரு கிரிக்கெட் ஆட்டமே அல்ல, டென்னிஸ் பந்து கிரிக்கெட்டை ஒருவர் ஆடியதற்காக அவருக்கு விளையாட்டு வீரர் அந்தஸ்து வழங்க முடியாது என்றும் டென்னிஸ் பந்து கிரிக்கெட் வேலை வாங்கித் தராது" என்று கூறினார்.
மேலும் இந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.