Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சச்சினுக்கு வார்ன் பிறந்த நாள் வாழ்த்து!

சச்சினுக்கு வார்ன் பிறந்த நாள் வாழ்த்து!
, புதன், 23 ஏப்ரல் 2008 (16:30 IST)
நாளை சச்சின் டெண்டுல்கருக்கு 35வது பிறந்த நாள். இதனை முன்னிட்டு ஆஸ்ட்ரேலிய அணி முன்னாள் வீரரும், ஐ.பி.எல். ராஜஸ்தான் ராயல்ஸ் அணித் தலைவருமான ஷேன்வார்‌ன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சச்சின் அளவிற்கு திறமையான வீரர்கள் இனி வருவதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் காத்துக் கிடக்கவேண்டியதுதான்... எனவே அவர் எத்தனை நாள் ஆட விரும்புகிறாரோ அத்தனை நாட்கள் அவரை விளையாட அனுமதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஷேன் வார்ன்.

தனது காலத்தின் மிகச்சிறந்த வீரராக சச்சின் டெண்டுல்கரையே கருதுகிறேன். லாரா, சச்சின் இருவருமே மிகச்சிறந்த வீரர்கள் என்றாலும் தான் சச்சினையே மகத்தான வீரராக கருதுகிறேன்.

கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்லாது வெளி உலகிலும் கண்ணியமான ஒரு நபராக அவர் இருந்து வருகிறார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிறார் எ‌ன்று புகழாரம் சூட்டியுள்ளார் ஷேன் வார்‌ன்.

Share this Story:

Follow Webdunia tamil