Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பி.சி.சி.ஐ. கூட்டும் கூட்டம் செல்லாது - லலித் மோடி

பி.சி.சி.ஐ. கூட்டும் கூட்டம் செல்லாது - லலித் மோடி
, புதன், 21 ஏப்ரல் 2010 (21:20 IST)
ஏப்ரல் 26ஆம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூட்டும் ஐ.பி.எல். நிர்வாகக் குழு கூட்டம் செல்லாது என்று லலித் மோடி அதிரடி மின்னஞ்சல் ஒன்றை நிர்வாகக் குழு உறுப்பினர்களுகு மோடி அனுப்பியதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 26ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க நான் தயாராக இயலாது இதனால் மே மாதத்திற்கு இந்தக் கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அவ்வாறு கூட்டம் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டால் அதில் தான் கலந்து கொள்ள இயலாது என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், மோடி இல்லாவிட்டாலும் இந்தக் கூட்டம் நடந்தே தீரும் என்று பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் உறுதியாக உள்ளது.

மேலும் 10 நாட்களுக்கு முன்பே தான் பங்குதாரர்கள் பெயர்களை வெளியிட தான் விரும்பியதாகவும், அப்போது ஷஷாங்க் மனோகரும், அருண் ஜெட்லீயும் தன்னைத் தடுத்தனர் என்றும் அவர் தன் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்திய அரசின் நிதிக் குழுத் தலைவர் ராஜி ஷுக்லா, சூழ்நிலை கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிர்பந்தித்தால், ஐ.பி.எல். நிர்வாகக் குழு கூட்டத்தில் அந்த கடும் முடிவு எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

"பதவி விலக மறுக்கிறார்களோ, இல்லையோ, அதைப்பற்றியேல்லாம் கேள்வியே இல்லை. பி.சி.சி.ஐ. தலைவர் மனோகர், ஷரத் பவார் ஆகியோரைச் சந்தித்த பிறகு, ஏப்ரல் 26ஆம் தேதி நிர்வாகக் குழு கூட்டத்தில் நாங்கள் ஒன்றாக அமர்ந்து முடிவு எடுப்போம்.

"இந்த முடிவுகள் இந்திய கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் நன்மை கருதியே எடுக்கப்படுகிறது, அந்த முடிவுகள் எவ்வளவு கடுமையாக இருப்பது பற்றியும் கவலையில்லை. கிரிக்கெட்டின் கௌரவத்தையும், பி.சி.சி.ஐ- நலனையும் கப்பதற்காக முடிவுகள் எடுக்கப்படும், கௌரவம் குறித்து கடந்த 60 ஆண்டுகளாக நாங்கள் எதையும் விட்டுக் கொடுத்ததில்லை. இந்த முறையும் இது விட்டுக் கொடுக்கப்பட மாட்டாது." என்று கூறியுள்ளார் ராஜிவ் ஷுக்லா.

இதற்கிடையே மோடி இல்லாமல் ஐ.பி.எல். கிரிக்கெட்டை திறம்பட நடத்த முடியும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அணி உரிமையாளர்களிடம் கூறிவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

3 நபர் குழு ஒன்றை அமைத்து ஐ.பி.எல். கிரிக்கெட்டை நடத்தவும் பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஒரு நபரிடம் அனைத்து அதிகாரங்களையும் கொடுக்கும் தவறு இனி நடைபெறாது என்று பி.சி.சி.ஐ. கூறுவதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil