சச்சின் 200!! நினைவுப்பாதை!
- ஸ்பெஷல்
, வியாழன், 10 அக்டோபர் 2013 (19:50 IST)
25
ஆண்டுகால கிரிக்கெட் பயணம்!! முடிவுக்கு வந்தது. சச்சின் டெண்டுல்கர் கடைசியில் இருதய கனத்துடன் ஓய்வு அறிவித்து விட்டார். மேற்கிந்திய தீவுகளுடன் விளையாடவுள்ள 2வது டெஸ்ட் போட்டி அவரது கடைசி டெஸ்ட் போட்டி. இந்த நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்வை துவக்கம் முதல் புள்ளி விவரங்களுடனுடனும், தனிப்பட்ட நினைவுகளுடனும் அசைபோடுதல் சுவாரசியமாக இருக்கும் என்று நம்புகிறோம்:1988,
பிப்ரவரி 23- 25
சச்சின் டெண்டுல்கருக்கு வயது 14. தனது பள்ளித் தோழன் வினோத் காம்ப்ளி(16) உடன் சேர்ந்து 664 ரன்களைக் குவித்து லைம் லைட்டிற்கு வந்தார். எங்கும் சச்சின், சச்சின் என்ற நமாவளி உர்வான சமயம்! சச்சின் இதில் 326 ரன்கள் எடுத்து வீழ்த்த முடியாமல் நாட் அவுட்டாக இருந்தார்.டிசம்பர் 11, 1988 - முதல் போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டில் சதம்:15
வயதான சச்சின் அப்போது வான்கடே ஸ்டேடியத்தில் ஜோதிகளை ஏற்றினார். குஜ்ராத்திற்கு எதிராக ஆட்டமிழக்காமல் சதம் எடுத்தார் சச்சின். முதல் தர கிரிக்கெட் முதல் போட்டியிலேயே சதம் எடுத்த இளம் வீரர் என்ற சாதனையுடந்தான் தன் வாழ்வைத் துவங்கியுள்ளார். வலையில் கபில்தேவை இவர் ஆடிய விதத்தைப் பார்த்த திலிப் வெங்சர்க்கார் இவரை மும்பை அணிக்கு தேர்வு செய்திருந்தார்.1989
சச்சினின் டெஸ்ட் டெபு!பச்சிளம் பாலகன் ஆன சச்சின் வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், இம்ரான் கான், ஆகியோரை சந்திக்கவேண்டும். வக்கார் யூனிஸ் பந்தில் மூக்கில் அடி வாங்கினார். மருத்துவ உதவி அப்போது அவருக்கு கிடைக்கவில்லை. காரணம் பாகிஸ்தான் மறுத்தது. அவர் 57 ரன்கள் எடுத்து தனது 16 வயது தைரியத்தை வெளிப்படுத்தினார்.நியூசீலாந்து தொடர்:இந்தத் தொடரில் அவர் முதன் முதலில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 88 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு அருமையான டெஸ்ட் இன்னிங்ஸ் அது. கடினமான ஸ்விங்கிங் சூழ்நிலைகளில் அவர் அவுட் ஸ்விங்கர் பந்துகளை மிட் விக்கெட் திசையில் புல் ஆடிய விதம் அனைவரையும் ஒரு ஜீனியஸ் உருவாகிவிட்டார் என்று எண்ண வைத்தது.சச்சின் முதல் டெஸ்ட் சதம்; ஆகஸ்ட் 14, 1990!
17
ஆண்டுகள் 112 நாட்கள்! சச்சின் வயது! ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் பலரும் இந்திய அணி தோற்றுத்தான் போகும் என்று நினைத்திருந்தவேளையில் களமிறங்கி 119 ரன்களை எடுத்து டெஸ்ட் போட்டியை அரிதான டிராவுக்கு இட்டுச் சென்றார். இளம் வயதில் டெஸ்ட் சதம் அடித்த 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார் சச்சின்.
1992
ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா தொடர்!மெக்டர்மாட், முரட்டு மீசை மெர்வ் ஹியூஸ் என்று ஆஸ்ட்ரேலிய வேகப்பந்து மிரட்டல். இதில் மெல்பர்னில் ஒரு அசத்தல் 40 ரன்களை எடுத்த சச்சின். அதன் பிறகு இன்னொரு லெஜண்ட் ஷேன் வார்ன் டெபு மேட்சான சிட்னியில் சதம் எடுத்தார். இந்த சதம்தான் சச்சினின் பட்டியலில் அன்று 2வது சிறந்த சதமாக இருந்தது.